ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் கொசுக்கள் வளர அனுமதிப்பதாகவும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
அடைமழை மற்றும் வெள்ளத்தால் கொசுத்தொல்லை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
பன்றி போன்ற விலங்குகளை கையாள்பவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.