ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், ஆண்டு முழுவதும் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உருளைக்கிழங்கு பயிர் சேதமடைந்துள்ளது.
ரஷ்ய – உக்ரேனிய இராணுவ சூழ்நிலை காரணமாக, எரிபொருள் உள்ளிட்ட பிற விநியோக நெட்வொர்க்குகளில் ஏற்படும் தாக்கம் மற்றொரு காரணம் என்றும் சந்தை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
உருளைக்கிழங்கு சிப்ஸ் தட்டுப்பாடு இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த Aldi மற்றும் Woolworths, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.