ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மர்ரே ஆற்றின் (The Murray) அருகே வசித்துவரும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.
விக்டோரியா (Victoria), நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), தெற்கு ஆஸ்திரேலியா (South Australia)ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக மர்ரே ஆறு செல்கிறது.
இன்று பின்னேரத்தில் அந்த ஆறு கரை புரளும் என்று நெருக்கடிக்காலச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.
அப்போது கடல் மட்டத்திலிருந்து 95 மீட்டர் உயரத்திற்கு ஆற்று நீரின் அளவு பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை இல்லாத வகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள விக்டோரியா மாநிலத்தின் எச்சுக்கா (EH-CHOO-KA) நகர குடியிருப்பாளர்கள் ஆயத்தமாகிவருகின்றனர்.
ஆற்று நீர், நகரின் வீதிகளுக்குள் புகுந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க, சுமார் 500 தற்காப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.