Cinemaசர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

சர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

-

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த வருட தீபாவளி வெளியீடாக சர்தார் படம் வெளியாகி உள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார்.

பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.

சர்தார் படத்தின் ஹீரோ கார்த்தி என்பதைவிட மித்ரன் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது திரைக்கதையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். மித்ரன் சொல்ல நினைத்ததை அப்பா மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்த அசத்தியுள்ளார்.

அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் அசத்தியுள்ளார் கார்த்தி. அவரைத் தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளது, யாருமே கதையில் தேவையில்லாமல் வந்து செல்லவில்லை.

முக்கியமான சமூக பொறுப்புள்ள ஒரு கதையில் ராஏஜென்ட், பாகிஸ்தான், சீனா என அனைத்தையும் உள்ளடக்கியதில் இயக்குனர் மித்ரன் வெற்றி பெறுகிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது.

காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது இந்த சர்தார் படம். ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைக்கிறார் இயக்குனர்.

கார்த்தியின் திரை பயணத்தில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்பா கார்த்திக்கு போடப்பட்ட மேக்கப் மட்டும் ஒரு உறுத்தலாகவே இருந்தது தவிர படத்தில் வேறு எந்த குறைகளும் இல்லை. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தீபாவளி அன்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது. சர்தார் சபாஷ்.

Latest news

சிட்னி பெண் மீது தீவிரவாத சமூக ஊடக விளம்பர குற்றச்சாட்டு

வன்முறை தீவிரவாதத்தை ஊக்குவிக்க சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது மொபைல் போனில் டஜன் கணக்கான தொடர்புடைய கோப்புகளை வைத்திருந்ததாகவும் சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண்...

பெற்றோரைப் பலிகொடுத்து குழந்தைகளுக்கு உதவுகிறதா AI?

AI கல்வி தொழில்நுட்ப செயலிகள் குழந்தைகளை கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் கவனமாக இருப்பது அவசியம்...

விக்டோரியாவில் மூடப்படும் மற்றொரு மருத்துவ வசதி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சமூக சுகாதார அமைப்புகளில் ஒன்றான Cohealth, இந்த ஆண்டு இறுதியில் அதன் பொது மருத்துவர் சேவைகளை மூட முடிவு செய்துள்ளது. நிதி சிக்கல்கள் காரணமாக...

ஆஸ்திரேலியாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள சைபர் குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் பெரிய வணிகங்களுக்கு எதிரான சைபர் குற்றம் ஒரு வருடத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சைபர் குற்றங்களால் சில வணிகங்கள் ஆண்டுக்கு $200,000...

சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக Australia Post ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

இரண்டு தபால் வரிசைப்படுத்தும் மையங்களில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து ஆஸ்திரேலிய தபால் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்தின் Townsville West End-இல் உள்ள...

ஆஸ்திரேலியாவில் மேலும் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. "காட்டுத்தீ நிலை" என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை, காட்டுத்தீ...