ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வாரமாக வெள்ள நெருக்கடி நிலை தொடர்கிறது.
கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனத்த மழை பெய்கிறது. வரும் வாரமும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அதனால் ஏற்படும் வெள்ளத்தால் அணைக்கட்டுகள் உடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria) ஆகியவற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பண்ணைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த ஆண்டுமட்டும் ஆஸ்திரேலியாவில் நான்கு முறை வெள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இம்முறைமட்டும் வெள்ளம் குறித்து 200க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களிடம் அவசரநிலைக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
வெள்ள நிவாரண நிதிக்காக 370 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.