News2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

-

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரல் பிரின்சஸ் கப்பலில் இருந்து மற்ற பயணிகள் அனைவரும் விரைவான சோதனைகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏறக்குறைய 2000 பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளின்படி, கப்பலில் உள்ள பயணிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து பயணிகளும் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயணிகள் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஆண்டுக்கு 05 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றன மற்றும் கொரோனா காலத்தில் முடங்கியுள்ளன.

பின்னர் ஒவ்வொரு மாநிலமும் கப்பல்களை அனுமதிக்கத் தொடங்கின, கடைசி மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியாவாகும். இதற்கிடையில், கொரோனா கொலப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக, பயணிகள் கப்பல் இன்று காலை டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஏறக்குறைய 3000 பயணிகள் அங்கு வந்தடைந்தனர், அடுத்த 06 மாதங்களில் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் ஹோபார்ட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளனர்.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...