Newsமூன்றாம் சார்லஸ் மன்னரால் உத்தியோகபூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்ட ரிஷி சுனக்!

மூன்றாம் சார்லஸ் மன்னரால் உத்தியோகபூர்வமாக பிரதமராக அறிவிக்கப்பட்ட ரிஷி சுனக்!

-

இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார்.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தேர்வான அவருக்கு கன்சர்வேட்டி கட்சியின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், லிஸ் ட்ரஸ் முறைப்படி தனது ராஜினமா கடிதத்தை, மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து இன்று வழங்கினார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார்.

இதையடுத்து இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளம் பிரதமர் எனும் பெருமையும் 42 வயதாகும் ரிஷி சுனக்கிற்கு கிடைத்துள்ளது.

Latest news

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...