ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரம்பற்ற வேலை நேரச் சலுகையை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் திகதி முதல் நிறுத்த மத்திய அரசு உறுதியான முடிவை எட்டியுள்ளது.
அதுவரை 02 வாரங்களுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அதிகபட்ச வரம்பிற்கு அப்பால் மாணவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நிவாரணம் வழங்க சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2022-23 ஆம் ஆண்டிற்கான இடம்பெயர்வு திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை 448 மில்லியன் டொலர்கள்.
ஆஸ்திரேலிய குடிவரவுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6.2 மில்லியன் டொலர்கள் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளார்.