ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 08 வருடங்களில் நிரந்தரமாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் படி, ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் மொத்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 235,000 ஐ தாண்டும்.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய புள்ளிவிவர அறிக்கைகள் ஆண்டுதோறும் சுமார் 365,000 புதிய மக்கள்தொகை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் காட்டுகின்றன.
கடந்த மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை இரண்டு கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்து 773 ஆக பதிவாகியுள்ளது.