ஆஸ்திரேலியாவில் எரிசக்தி விலைக்கு நிலையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்களின் நிலைப்பாடு என ஒரு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுமார் 79 சதவீதம் பேர் இதே கருத்து கணிப்பில் கலந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மின்சாரம் அல்லது எரிவாயு கட்டணம் செலுத்துவதில் சிரமப்படும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என 59 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எரிசக்திக்கு நிலையான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை தொழிலாளர் கட்சி நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார்.
கட்டணச் சலுகை அளிப்பதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.