Newsகுயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

குயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

-

குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராக இலங்கையர் ஒருவர் மாறியுள்ளார்.

அமில வெத்தசிங்க என்ற இலங்கையரே இவ்வாறு பீட்சா உணவகத்தின் உரிமையாளராகியுள்ளார்.

2002 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடையில், அவர் 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 A-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அமில வெத்தசிங்க இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் மற்றும் கும்ப்ரியாவில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் 113 இன்னிங்ஸ்களில் அமிலா பெற்ற ரன்களின் எண்ணிக்கை 2583 மற்றும் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 136 ரன்கயை பெற்றுள்ளார்.

03 சதங்களும் 11 அரைசதங்களும் அவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்தரப் போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அமில வெத்தசிங்க சகலதுறை வீரராகும்.

ஆஸ்திரேலியா வந்த பிறகும் கிரிக்கெட்டில் ஈடுபட்டு, குயின்ஸ்லாந்தில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அமிலாவின் மகன் தற்போது 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர, பீட்சா உணவகத்தை தொழிலாக நடத்தி வருகிறார் அமில.

இந்த நிலையில் OzSrio Pizza Kebab & Cafe-Ipswich எனப்படும் பீட்சா உணவகம் குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

Black Friday தள்ளுபடிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

Black Friday விற்பனையுடன் வரும் போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஏமாற்றும் விளம்பரங்கள் குறித்து ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறாக வழிநடத்தும்...

ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் புயல்

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையைக் கடக்கவிருக்கும் வெப்பமண்டல சூறாவளி Fina, 2 ஆம் வகை புயலாக வேகமாக வலுப்பெற்று வருவதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இது இன்றிரவு 2...