கார்த்தியுன் நடிப்பில் வெளியகியுள்ள சர்தார் ஒரு வெற்றி படம்.

கார்த்தி மற்றும் அனைத்து நடிகர்களும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளர்கள்.

அதன் கதை களத்தை மிக சுருக்கமாக பார்ப்போம்.

விளம்பரப் பிரியராக இருக்கும் காவல்துறை ஆய்வாளர் விஜய் பிரகாஷ், தன்னையும் காவல் துறையையும் அடிக்கடி டிவிட்டர் டிரெண்டிங்கில் வைத்திருப்பவர். இவர் தான் சர்தார் ஹீரோ கார்த்தி 🔥

உளவுத்துறையின் முக்கிய ஃபைலை திருடியதாக சமூக ஆர்வலர் சமீராவை (லைலா) தேடி செல்லும் கார்த்தி, அதைக் கண்டுபிடித்தால், இன்னும் அதிகமாக டிரெண்ட் ஆகலாம் என நினைக்கிறார்.

அவரை பின் தொடரும்போதுதான், தண்ணீர் மாஃபியா, தேசத்துரோகி என முத்திரைக் குத்தப்பட்ட தன் தந்தை ‘சர்தார்’ யார் என்பது உள்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரிய வருகிறது.

ஆகவே சர்தார் Double Acting திரைப்படம்.

பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதுதான், படம்.

ஜாலியான இன்ஸ்பெக்டர், சீரியஸான உளவாளி என 2 வேடங்களிலும் வித்தியாசம் காட்டி பிரம்மாதப்படுத்தி இருக்கிறார், கார்த்தி.

விஜய்பிரகாஷ் ஒரு பக்கம் நடிப்பில் இயல்பு காட்டினாலும் ‘சர்தார்’ பாத்திரத்தின் நடிப்பிலும் உடல் மொழியிலும் இதுவரை பார்க்காத கார்த்தி, பளிச்சென்று தெரிகிறார். அவருக்காக திலீப் சுப்பராயன் அமைத்திருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் ஜில்லிட வைக்கின்றன.

கார்த்தி தன் நடிப்பில் அனைவரையும் ஈரத்திருக்கும் அதே வேலை வழக்கறிஞரான ராஷி கன்னாவுக்கு, கார்த்தியை காதலிப்பது, பின் அவருக்கு உதவுவதுதான் வேலை.

ஆனால் மனதில் நிற்பது பிளாஷ்பேக்கில் வரும் ரஜிஷா விஷயன்தான்.

அவர் சின்ன சின்ன உடல் மொழி மூலம் கவனம் ஈர்க்கிறார்.

நீண்ட காலத்துக்குப் பபிறகு சமூக போராளியாக லைலாவைப் திரையில் பார்ப்பது நன்றாக உள்ளது.

ஏஜென்ட்டுகள், கரப்பான்பூச்சி யூகி சேது, விக்டர் அவினாஷ், சித்தப்பா முனிஷ்காந்த், சிறுவன் ரித்விக், அரசியல்வாதி இளவரசு ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் சிறப்பாக ஒன்றி இருக்கிறார்கள்.

பாடல்கள் எல்லாம் சார்தாருக்கு ஒரு பிளஸ் point 😍