தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் கார்த்தி . இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சர்தார்.
சர்தார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் பெரிய எதிர் பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ளது.
கார்த்தியின் திரைப்பயணத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள சர்தார் திரைப்படம் எப்படியுள்ளது என்பதை இந்த திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
கதைக்களம்
சென்னை போலீஸ் அதிகாரியான கார்த்தி (விஜயகுமார்), மிகவும் பிரபலமான போலிஸ் அதிகாரியாக பணி புரிகிறார்.மேலும் அப்படிப்பட்ட கார்த்தி தனக்கு சிறுவயதில் இருந்தே நன்றாக தெரிந்த வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் ராஷி கண்ணாவை பின் தொடர்ந்து காதலித்து வருகிறார்.
மறுபுறம் குடிநீர் பிலாஸ்டிக் பாட்டில்கள் மூலம் விற்கப்படும் பல்வேறு அவலங்கள் எதிர்த்து போராடி வருகிறார் நடிகை லைலா. இதன் பின்னர் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பைல் திருடப்படுகிறது, இதை திருடியது லைலா தான் என்பது கண்டு பிடித்து பின் தொடர்கிறார் கார்த்தி, லைலாவின் மகனான ரித்விக்கும் கார்த்தியுடன் தனது அம்மாவை தேட அவர் இறந்து போனது அப்போது தான் தெரிய வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் லைலா தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கும் கார்த்தி, இதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களை வைத்து ஆராய ஆரம்பிக்கிறார்.
மேலும் இது அனைத்திற்கும் பின்னால் வாட்டர் மாஃபியா இயங்கி வருவதும், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சர்தார் என்ற உளவாளியை வெளியே கூட்டிவர லைலா முயற்சி இருப்பதும் கார்த்திக்கு அப்போது தான் தெரிய வருகிறது.
இதன்பின் சர்தார் யார்? சிறையில் இருக்கும் சர்தார் இந்தியாவிற்கு வந்து எப்படி இந்த வாட்டர் மாஃபியா-க்கு எதிராக தனது மகனுடன் தடுத்து நிறுத்துகிறார் என்பதே மீதி கதை அமைகின்றது.