ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப 800 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை ஒதுக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த மழைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது.
சில இடங்களில் ஒக்டோபர் மாதத்தில் சராசரி மழைப்பொழிவை விட நான்கு மடங்குக்கு மேல் பெய்துள்ளது.
தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பல உயிர் சேதங்கள் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 2,000 வீடுகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.