Cinemaசூப்பர் ஹிட்டான சர்தார் - இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

சூப்பர் ஹிட்டான சர்தார் – இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

-

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது என்றும் இந்தப் படம் ’விருமன்’, ’பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து கார்த்தியின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு டொயோட்டா லான்சன் காரை பரிசாக அளித்துள்ளது. இந்த காரின் சாவியை நடிகர் கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு வழங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரனுக்கு இந்த பரிசு ஒரு சூப்பர் பரிசு என்பது குறிபிடத்தக்கது.

இந்தநிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பு குறித்த திட்டம் இருப்பதாகவும் விரைவில் ’சர்தார் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’சர்தார்’ படத்தையடுத்து கார்த்தி தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ’கைதி 2’ படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் அதன்பிறகு ’சர்தார் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...