ஆஸ்திரேலியாவில் Medicare நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் இருக்கும் நிதியின் ஒவ்வொரு டொலரும் திறம்பட பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் வைத்தியர்கள் குழுவொன்று மருத்துவ காப்பீட்டு நிதியத்தின் ஊடாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் சார்பாக Medicare ஊடாக வருடாந்தம் சுமார் 08 பில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும், பொய்யான பட்டியல்களை தயாரித்து மோசடி செய்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை ஜனவரியிலும், முழு அறிக்கையும் பிப்ரவரியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.