ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்புக்குழுவினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர்.