Newsசிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க - இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

சிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க – இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

-

ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...