Newsஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளையும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதன்போது அவருக்கு பிணை வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சிலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு பிணை வழங்கப்பட்டாலும் வழக்கு தீர்ப்பு வரும்வரை அவரால் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற முடியாது.

அதேவேளை, தனுஷ்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தேசிய அணியில் தடை விதிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...