இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று சிட்னியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க இருந்தார். ஆட்டம் முடிந்த பிறகு கைது அவர் கைது கூறப்படுகிறது.
தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை அணி இன்று காலை கொழும்பு புறப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
எவ்வாறாயினும், அஷேன் பண்டார உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்ட போதிலும் அவர் அணியில் தொடர்ந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது