Newsஇலங்கை கிரிக்கெட் வீரரின் பிணையை நிராகரித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்

இலங்கை கிரிக்கெட் வீரரின் பிணையை நிராகரித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை ஆஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதனையடுத்து அவர் தொடர்ந்தும் அவர் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் தனுஷ்க குணதிலக்க நீதின்றில் பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸாருக்கு அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது

எவ்வாறாயினும், அவர் ஒரு திருத்தம் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...