இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாமிக்க கருணாரத்ன, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, சிட்னியில் உள்ள கெசினோ ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாமிக்க கருணாரத்ன அங்குள்ள மற்றுமொருவரைத் தாக்கியதாக இலங்கை தொலைகாட்சியில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணி தலைவரான தசுன் ஷானக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரால் மோதல் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற அணிக்கு கிட்டத்தட்ட இருபது விருந்துகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவற்றில் 6 விருந்துகளுக்கு மட்டுமே நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றனர். ஆனால் சில வீரர்கள் மேலாளரை தவறாக வழிநடத்தி வரம்பை மீறி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறிப்பிட்டுள்ள நேரத்தை விடவும் பல மணித்தியாலங்கள் தாமதமாகவே வீரர்கள் அறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.