Newsயாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் - குவியும்...

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் – குவியும் பாராட்டு

-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

முன்னர் காணப்பட்ட பிரிவு, தற்போது பராமரிப்புடன் கூடிய நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின்,ஆதரவில் குறித்த பிரிவு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

கட்டடத்தை பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி மாஸ்டர் திறந்து வைத்தார். நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. Gnanaponraj உட்பட மருத்துவர்கள்,தாதியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஈகிள் கெயர் ரிறஸ்ட் அமைப்பானது, இலங்கையில் உள்ள மக்கள் மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகின்றது.

யாழ் பரியோவான் கல்லூரி 1983ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவானது, புதுப்பிக்கப்பட்டமையில் பகுதியளவில் தமது உதவியை இவ் அமைப்பு ஊடாக வழங்கியுள்ளனர். அத்துடன் இவ் அலகைப் பராமரிப்பதற்கும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...

பியர் குடித்து தனது 110வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

தனது 110வது பிறந்தநாளை கொண்டாடிய பெர்த் பாட்டி ஒருவர் தனது நீண்ட ஆயுளின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்ஜெட் க்ரோக் என்ற பெண் கடந்த திங்கட்கிழமை தனது 110வது...