ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்திடம் இணையத் தகவல் ஊடுருவல் கும்பல் 10 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டுள்ளது.
Medibank நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள் சுமார் 9.7 மில்லியன் பேரின் தகவல்களை ஊடுருவல் கும்பல் திருடிவிட்டது. பிரதமர் ஆன்டனி அல்பனீசியின் (Anthony Albanese) தனிப்பட்ட தகவல்களும் அவற்றில் அடங்கும்.
முக்கியமான சிலருடைய பெயர்கள், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பிறந்த தேதி, கடப்பிதழ் எண் உள்ளிட்ட தகவல்களை மாதிரிக்காக நேற்று ஊடுருவல் கும்பல் இணையத்தில் கசியவிட்டது. பிணைத்தொகை தொடர்பான கோரிக்கையையும் கும்பல் அதில் குறிப்பிட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தனியார் காப்புறுதி நிறுவனமான Medibank பிணைத்தொகை கொடுக்க மறுத்துவிட்டது.
ஊடுருவல் கும்பலைச் சேர்ந்தவர்கள் “தரம்கெட்ட குற்றவாளிகள்” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் (Clare O’Neil) கூறியுள்ளார்.