ஆஸ்திரேலியாவில் ஓய்வு பெறுபவர்களுக்கு 10 வருட குடியுரிமை விசா வழங்க தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
அந்த நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் இந்த விசா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் வீடு, உணவு உட்பட பல வகையான செலவுகள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற பலர் இதை நாடியதாகவும் கூறப்படுகிறது.
02 இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்கள் சொத்துக்களை கொண்ட எந்தவொரு ஓய்வூதியதாரரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி ஒரே தடவையாக 10 வருடங்களுக்கு விசா வழங்கப்படுவது விசேட அம்சமாகும்.