Newsஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் - பரிதாப நிலையில் தனுஷ்க

ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் – பரிதாப நிலையில் தனுஷ்க

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய நீதிமன்றினால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையில் செல்ல நீதிவான் Janet Wahlquist அனுமதி வழங்கினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர்,தனுஷ்கவுக்கான பிணை நிற்க முன்வந்திருந்தார்.

மேலும், தினசரி காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது, முறைப்பாட்டாளருடன் எந்தவிதத்திலும் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் பிணை நிபந்தனையில் நீதிவான் தெரிவித்துள்ளார்.

மேலும், டிண்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை அணுக்கக்கூடாது என்றும் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிக்க இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெனட் வொல்கிஸ்ட் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அங்கு அவர் பார்க்லியா சிறையிலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த காவல்துறை தரப்பு சட்டத்தரணி கெர்ரி-ஆன் மெக்கின்னன், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பிற்கு தனுஷ்கவினால் அச்சுறுத்தல் நேரலாம் என்று வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தால் அவருக்கு எவ்வாறு பிணை கிடைக்கும் என்பதை பரிசீலிப்பதாக நீதிவான் கூறினார்.

எவ்வாறாயினும், தனுஷ்க சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி முருகன் தங்கராஜ், அவர் பிணை நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பார் எனக்கூறி, அவரை விடுவிக்க கோரினார்.

கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறை விசாரணையில், தனுஷ்க பாதிக்கப்பட்டவரால் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார். எனினும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை.

குணதிலக்க தனது கடவுச்சீட்டை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அவர் தப்பிக்கும் எண்ணத்தை வெளிகாட்டவில்லை என்றும் சட்டத்தரணி முருகன் தங்கராஜ் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும், பரிசீலித்த நீதிவான் பிணை அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, 31 வயதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

அதன்போது அவர் தங்கியிருந்த சிட்னியில் உள்ள ஹயாட் ரீஜென்சி விடுதியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அவர்மீது சம்மதம் இல்லாத உடலுறவு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Latest news

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...

பள்ளி செல்லும் விக்டோரியன் குழந்தைகளின் பெற்றோருக்கு $400 உதவித்தொகை

விக்டோரியா மாநில அரசு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் அறிவிக்கப்பட்ட மாநில பட்ஜெட் திட்டத்தின்படி, இந்த அமைப்பின் மூலம், ஒரு...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

மெல்பேர்ண் மற்றும் சிட்னி வீடுகளின் விலை தொடர்பில் வெளியான நற்செய்தி

"SQM Research" இன் சமீபத்திய Boom and Bust அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வீடுகளின் விலை மேலும் குறையும் என்று...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...