ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் சம்பள அதிகரிப்பை பெறக்கூடிய பல சேவைத் துறைகளை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இணைய-வர்த்தகம் மற்றும் விற்பனை-பொறியியல் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்தத் துறைகளில் அதிக தேவை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை முதன்மையாக இதைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 15 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தொழில்நுட்பம்-உயிரியல்-சுரங்க-சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 03 முதல் 05 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் தற்போது 3.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.