ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.
அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால் வைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிணையைப் பெறுவதற்குத் தேவையான முழுத் தொகையையும் நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான உறவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.
அவர் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் பெறுவதற்காக ஆஸ்திரேலிய முகவரி வழங்கப்பட்ட இலங்கை பணக்கார குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சிட்னியில் வசிக்கும் இலங்கையின் செல்வந்த குடும்பங்கள் பல அவரது செலவுகளை ஈடுகட்டவும், தங்குமிட வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளதுடன், சிட்னி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றும் தனுஷ்கவின் செலவுகளுக்கு பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் அடுத்த அழைப்பாணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.