ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பொருட்களை வாங்குவதற்கு buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ், முறையான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்த நம்புவதாகக் கூறினார்.
குறிப்பாக கடன் அட்டை அல்லது கிரெடிட்டில் பொருட்களை வாங்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
Afterpay மற்றும் Zip போன்ற சேவைகள் மூலம் பொருட்களை வாங்குவது ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வாங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 11.5 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகளவில் இதற்கு இலக்காகி வருவதாகவும், முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணம் செலுத்துவதில் தவறியது அவற்றில் முக்கியமானது.