ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த முதல் அகதிகள் குழு நியூசிலாந்து சென்றடைந்துள்ளது.
புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வரும் மக்களை நியூசிலாந்துக்கு அனுப்புவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 06 அகதிகள் ஒக்லாந்தை வந்தடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்டுக்கு அதிகபட்சமாக 150 சட்டவிரோத படகுகள் வருவதை ஏற்க நியூசிலாந்து ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. தற்போது நவுரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 112 பேருக்கு எதிர்காலத்தில் நியூசிலாந்தில் புகலிடம் வழங்கப்படவுள்ளது.
மேலும் 1100 பேர் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமூக தடுப்பு மற்றும் பிரிட்ஜிங் விசாவில் உள்ளனர்.