Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் திடீர் மரணம்

-

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி ஆஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு வீசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த வீசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு வீசா கிடைத்த பின்னர், அவர்களையும் ஆஸ்திரேலியா அழைப்பதற்கு அவர் விரும்பியதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, சாமியின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

வார இறுதி விநியோகங்களை மீண்டும் தொடங்கும் Australia Post

கிறிஸ்துமஸுக்கு முன்பு 100 மில்லியன் பார்சல்களை வழங்க Australia Post தயாராகி வருகிறது. பண்டிகைக் காலத்தில் பார்சல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தலைநகரங்கள் மற்றும்...

விக்டோரியாவின் பிரபலமான Panda Mart-ஐ மூட உத்தரவு

விக்டோரியாவில் உள்ள Panda Mart சில்லறை விற்பனைக் கடைகள் அவசர நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சட்டவிரோத பொருட்கள் அலமாரிகளில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம்...

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

பல நன்மைகளைக் கொண்டுள்ள மெல்பேர்ண் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செயல்பாட்டு பேட்டரியுடன் கூடிய மெல்பேர்ண் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் (MREH), விக்டோரியாவின் மெல்டன் அருகே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில மின்சார ஆணையம் (SEC)...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...