ஆஸ்திரேலியாவின் Byron Bay மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
5 வயது பியூ (Beau) நீச்சல் குளத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்டதாக சிறுவனின் தந்தை கூறினார்.
மலைப்பாம்பு பியூவைக் கடித்தவாறே நீச்சல் குளத்துக்குள் குதித்தது. பின்பு அது பியூவின் காலைச் சுற்றி நெருக்கியது. பியூவின் தாத்தா நீச்சல் குளத்தினுள் குதித்து சிறுவனை வெளியே தூக்கியுள்ளார்.
அப்போதும் மலைப்பாம்பு அவரின் காலைச் சுற்றியிருந்தது. இதையடுத்து பியூவின் தந்தை பாம்பைப் பியூவின் காலிலிருந்து அகற்றினார்.
மலைப்பாம்பின் கடி நச்சு கொண்டதல்ல என்று அறிந்ததும் பியூ அமைதியடைந்ததாக அவனின் தந்தை தெரிவித்தார்.