ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற Mars-Snickers மற்றும் Milkyway சாக்லேட் உற்பத்தியாளரான Mars Wrigley, சாக்லேட் பொதியிடுவதற்கு உக்கும் காகிதத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களில் இருந்து அனைத்து சாக்லேட் பேக்கேஜிங் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், தங்கள் சாக்லேட் பொருட்களின் பொதியிடுவதன் மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 360 டன் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலில் சேர்வதைத் தடுக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்.
02 வருடங்களாக பல்லாற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பலனாக இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்காக கூடுதலாக 2.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டாலும், வாடிக்கையாளர் மீது எந்த வகையிலும் செலவு திணிக்கப்படாது என Mars Wrigley நிறுவனம் உறுதியளிக்கிறது.