இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் பியர் விலை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் கிழக்கு மாநிலங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பார்லி பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் பியர் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், எவ்வளவு விலை உயரும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸுக்கு வாரத்திற்கு 170 டொலர்கள் கூடுதலாகச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.