Newsஅபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

அபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

-

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...