News16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

-

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ லேக்கீ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை சமன் செய்வதற்காக டென்மார்க் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது.

உலகக்கிண்ண தொடரில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலிருந்து ஆஸி. இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Latest news

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...