ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 10,000 பேரின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூகுள் – மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் சேவைகள் தொடர்பில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 6000 நியூசிலாந்து நாட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்ட தரவுகளில் அடங்கும்.
இந்த தனிப்பட்ட தரவுகளை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக ஒருவர் 09 டொலர்களை பெற வேண்டும் எனவும் சைபர் தாக்குதலாளர்கள் தெரிவித்துள்ளனர்.