ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்ட மோசமான அவுஸ்திரேலியராக கருதப்படும் நீல் பிரகாஷ் மீது 06 பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை, பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும். 2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று கிட்டத்தட்ட 02 வருடங்களாக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நீல் பிரகாஷ், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் டார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மெல்போர்னில் வசிப்பவர் என்பதால், அவரை விக்டோரியா மாநிலத்துக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு – மெல்பேர்ன் நீதிமன்றம் தீர்மானம்
-