Breaking Newsமனநல பிரச்சினைகளுக்கு எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் Lifeline எண்.

மனநல பிரச்சினைகளுக்கு எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் Lifeline எண்.

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதேனும் மன அல்லது குடும்ப பிரச்சனைக்கு உதவி தேவைப்பட்டால் 13 11 14 (Lifeline) என்ற எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீங்கள் மட்டுமின்றி உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் அல்லது இதுபோன்ற மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வேறு எவருக்கும் இந்த எண்ணை தெரிவிக்கலாம்.

மெல்பேர்னின் Sandhurst பகுதியில் வசித்து வந்த 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் தனது 43 வயது மனைவியைக் கொன்ற செய்தியுடன் 13 11 14 என்ற இலக்கம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு 11.40 மணியளவில் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரால் அவர்களது மகன் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இலங்கையர் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிசிடிவி கேமராவில் அவரது மகள் தனது தாயின் கொலை குறித்து பக்கத்து வீட்டினரிடம் தெரிவித்ததும் பதிவாகியுள்ளது.

சமீபகாலமாக இருவரும் பிரிந்து வாழ்வது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...