ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விளையாட்டு அமைச்சினால் உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான மேலதிக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லாஃபர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப குழுவொன்றின் ஆலோசனை பெறப்படும் என மேலதிக சொலிசிட்டர் தெரிவித்தார்.
புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்குவதுடன், கிரிக்கெட் சட்டம் மற்றும் அது தொடர்பான கிரிக்கெட் ஒழுங்குவிதிகளும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலதிக சொலிசிட்டர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.