Breaking News3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

-

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சுமார் 22 லட்சம் பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12 முதல் ஜனவரி 6 வரையிலான காலகட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 03 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை காலமாக இருக்கும் என சிட்னி விமான நிலைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் சுமார் 19 இலட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் ஈடுபடுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் பரவத் தொடங்கிய 2019 டிசம்பரில் இருந்து இது 91 சதவீதம் அதிகமாகும்.

சர்வதேச விமானப் பயணிகளின் வளர்ச்சி 71 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு விமானத்திற்கு 02 மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச விமானத்திற்கு 03 மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...