பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்றது.
ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹன்சிகா ஏற்கனவே திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்க்கு விற்றுவிட்டார் என செய்தி பரவிய நிலையில் தற்போது வரை திருமண போட்டோ வீடியோ எதுவும் வெளிவராமல் இருந்தது.
இந்த நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
சோஹைல் கதுரியா கடந்த சில ஆண்டுகளாக ஹன்சிகாவின் பிசினஸ் பார்ட்னராக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறியது. தற்போது இருதரப்பின் குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
![](https://tamilaustralian.com/wp-content/uploads/2022/12/318210154_576541971147343_1704697093483099441_n-870x1024.jpg)
![](https://tamilaustralian.com/wp-content/uploads/2022/12/317939808_576542071147333_5088797979622700816_n-1-1024x576.jpg)
![](https://tamilaustralian.com/wp-content/uploads/2022/12/317985975_576542017814005_467548017942268207_n-1-870x1024.jpg)
![](https://tamilaustralian.com/wp-content/uploads/2022/12/318173167_576542047814002_4068888192503619594_n-2-1024x637.jpg)