Breaking Newsஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை - அமைச்சரவை கூட்டத்தில்...

ஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை – அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்பு!

-

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் கட்டணங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் கூடிய விரைவில் கட்டண நிவாரணம் வழங்க தேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

அதன்படி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மாநில எரிசக்தி அமைச்சர்கள் நேற்று ஒப்புக்கொண்ட விடயங்கள் தொடர்பில் தேசிய அமைச்சரவை கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உடன்பட்ட விடயங்களை சட்டமாக நிறைவேற்றுவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடை காலத்துக்கும் கோவிட் நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...