மின் கட்டணம் குறித்து எரிசக்தி அமைச்சர்கள் முடிவெடுக்கின்றனர்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சப்ளையர்களுக்கு பணம் செலுத்தும் திட்டத்தில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறைந்த மின்கட்டணம் ஏற்படும் பட்சத்தில், உற்பத்தி செலவுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும். இதன் கீழ் 10 பில்லியன் டாலர் நிதியம் நிறுவப்படும் என்று மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார். இதற்கிடையில், எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களுக்கு அதிகபட்ச வரம்பை விதிப்பது பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் நாளை கூடும் தேசிய அமைச்சரவையின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. எரிசக்தி அமைச்சர்கள் இன்று எடுக்கும் தீர்மானங்களுக்கு நாளை ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.