அவுஸ்திரேலியாவில் இணையக் கட்டணங்கள் அதிகரித்த போதிலும், கடந்த சில வருடங்களாக சேவை தரத்தில் அதிகரிப்பு ஏற்படவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2021-22 காலகட்டத்தில் NBN இணையப் பொதிகளின் விலைகள் 09 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அவர்களின் சேவை வழங்கல் - பராமரிப்பு போன்றவை திருப்திகரமாக இல்லை என்று மேலும் கூறுகிறது. அவுஸ்திரேலியா முழுவதும் வசிக்கும் சுமார் 80 இலட்சம் வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. NBN இன் குறைந்த விலை தொகுப்பு விலைகள் 3.6 சதவீதம் / நடுத்தர தொகுப்புகள் 4.7 சதவீதம் மற்றும் அதிவேக தொகுப்புகள் 09 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.