Cinemaபிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் - திரையுலகினர் பலர்...

பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் – திரையுலகினர் பலர் இரங்கல்.

-

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் திகதி காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இவர் மறைந்த நடிகரும், இயக்குநருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக பூந்தோட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து நகைச்சுவை நடிகனாக அறியபட்டவர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 200இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவ நாராயணன் காலமானதை அடுத்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...