Sportsநெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு லுசைல் உதைபந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...