உலக சாம்பியனான பிரேசில், 05 தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது. அது குரோஷியாவுக்கு எதிரான தோல்வியுடன். FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி, போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி உதைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் குரோஷிய அணி 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த பிரேசிலை வெற்றியீட்டி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
குறித்த போட்டியின் போது, போட்டியின் முழு நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி உதைகளின் மூலம் குரோஷியா வெற்றியை பதிவு செய்தது.