Articleஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

-

ஆஸ்திரேலியாவில் ஏற்படுகின்ற காட்டுத்தீயானது விரைவாகப் பரவி, உயிரிழப்பு உட்பட பரவலான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம் என்பதால் அவற்றுக்கு கவனம்செலுத்துங்கள்

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், இதைப் புரிந்துகொண்டு ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் புதர் நிலமொன்றில் அல்லது அதற்கு அருகில் வசிப்பவராக இருந்தால், தீயினால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயம் உள்ளது.

தீ ஆரம்பிப்பதற்கும், நமக்கு நிறைய சவால்கள் ஏற்படுவதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்,வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் ஆகும். இவை தீ தொடங்குவதை மிகவும் எளிதாக்கும்.

அதற்கு அடுத்தது காற்று. பலத்த காற்று வீசும்போது, தீ பரவுவது எளிதாகிறது. காட்டுத்தீ அபாயம் அதிகமுள்ளபோது தீயணைப்பு துறையினர் தீ மூட்டுவதற்கான தடையை விதிக்கின்றனர்.

இத்தடை நடைமுறையில் இருக்கும் போது, தீயை உண்டாக்கும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம்.

அடிப்படை நிலை ஒரு ‘அறிவுறுத்தல்’ ஆகும். ‘அறிவுறுத்தல்’ என்பதன் அர்த்தம் உங்கள் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால், நீங்கள் விழிப்புடன் இருந்து சுற்றுப்புறங்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது நிலை ‘கண்காணித்தல் மற்றும் செயற்படல்’. கண்காணித்தல் மற்றும் செயற்படல்’ என்பது நீங்கள் தப்பிப்பிழைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

போதிய தயார்ப்படுத்தல்களுடன் இருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்தைப் பாதுகாக்கலாம், அல்லது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம் என்பதே இதன் பொருள்.

எம்மிடம் உள்ள அதியுச்ச எச்சரிக்கை ‘அவசரகால எச்சரிக்கை’.மக்களின் உயிருக்கோ சொத்துக்களுக்கோ நேரடி அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பாக தங்கியிருப்பதன் மூலம்

அல்லது அங்கிருந்து வெளியேறுவதன் மூலம், மக்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

பொதுவாக எச்சரிக்கை வழங்கப்படும்போது சில தெளிவான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.

மின்னல் போன்ற இயற்கையான காரணங்களினாலோ அல்லது விபத்தாலோ காட்டுத்தீ தொடங்கலாம். சில சமயங்களில், அவை வேண்டுமென்றே தொடங்கப்படுகின்றன.

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் தீயணைப்பு திட்டமொன்றை வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இதற்குத் தயாராவதற்கு மக்கள் தமக்கிருக்கும் அபாயங்களை அறிந்து கொள்ளவேண்டும்- குறிப்பாக காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

பின்னர் அதிலிருந்து தப்புவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் பேசலாம் அல்லது புதர் நிலத்திற்கு அருகில் நீங்கள் வேலை செய்தால், ஒரு திட்டத்தை வைத்திருக்கலாம்.

உங்களுக்கு அருகில் ஒரு காட்டுத்தீ ஆரம்பித்தால் நீங்கள் அங்கிருந்து வெளியேறப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு வைத்து அங்கிருந்து நீங்கள் சீக்கிரமாகவே புறப்படலாம்.

அல்லது நீங்கள் தயாராகவிருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்துக்களை பாதுகாக்கலாம்.

மக்கள் அங்கேயே தங்கியிருந்து தமது சொத்துக்களைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்றால், தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன நடக்கப் போகிறது என்பது மட்டுமல்லாமல், தண்ணீர் விநியோகம் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் மிகவும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் இது மிகவும் சவாலான சூழ்நிலையாக இருக்கும்.

காட்டுத்தீ அபாயமுள்ள காலப்பகுதி ஆரம்பிக்க முன்னரேயே அது குறித்த திட்டமிடல்களை நீங்கள் தொடங்க வேண்டும்.

அதிக அச்சுறுத்தலான காலத்திற்கு முன்பு, குறிப்பாக கோடைகாலத்திற்கு முன்பு, மக்கள் தங்கள் வீட்டையும் சொத்துக்களையும் தயார் செய்வது மிகவும் முக்கியம்.

உதாரணமாக புற்களை வெட்டலாம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம்.

மற்றும் அவர்களது உள்ளூராட்சி சபையைத் தொடர்புகொள்ளலாம். தீ ஆபத்தை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கும். அவற்றைத் தெரிந்துகொள்வதுடன் அவற்றுக்கு இணங்கி நடப்பதும் மிகவும் முக்கியம்.

ஒரு காணி அல்லது வீட்டைச் சுற்றி 20 மீட்டர் பாதுகாப்பு வலயத்தை அமைக்கலாம். எரிபொருளை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம். Reticulated garden beds மற்றும் அது போன்ற எளிதில் தீப்பற்ற முடியாத விடயங்கள் அந்த பகுதியில் மிகவும் முக்கியம். இவை கோடைக்கு முன் செய்யப்பட வேண்டும்(அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்)

Latest news

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

மெல்பேர்ண் பல்கலைக்கழகத்திலிருந்து 1500 உதவித்தொகைகள்

மெல்பேர்ண் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளுக்கான பாதைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு, தரம் 12 இல் உயர்...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...