ஒரு தவறு காரணமாக, சுமார் 130,000 Telstra வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு ஆன்லைனில் அம்பலமானது. தனி நபர்களின் பெயர்கள் - முகவரிகள் - தொலைபேசி எண்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் தரவு அமைப்புகளை புதுப்பிப்பதில் ஏற்பட்ட பிழை என்றும் Telstra அறிவித்தது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து 130,000 வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ளவும், சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் Telstra முடிவு செய்துள்ளது.